கன்னியாகுமரியை சேர்ந்த இரு வாலிபர்கள் கானா நாட்டில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் செயல்பட்டு வரும் முந்திரி பருப்பு பதனிடும் தொழிற்சாலையில் குமரியை சேர்ந்த ஷைபின் மற்றும் ஜெயசந்திர சேகர் பணியாற்றி வந்தனர்.
தொழில் சம்மந்தமாக இருவரும் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இவர்களுடைய கார் முன்னால் நின்றுகொண்டிருந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவரும் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.