தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் 5 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.
தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் கைபற்றினர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, நல்கொண்டா மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு போதைப்பொருள் ஒழிப்புக் குழு முன்னிலையில், மாவட்ட எஸ்.பி. சந்தன தீப்தி அவற்றை தீயிட்டு கொளுத்தினார்.
மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.