பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ ஓட்டலில் குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்ற ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி குண்டு வெடித்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப் மற்றும் அப்துல் மதின் தாஹா ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
இதில், குற்றவாளிகள் இருவரும் வெடிகுண்டு சம்பவத்துக்கு முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி இருந்ததாக, வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.
இதனால், திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அவர்களை அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.