சென்னையில் ஜமாத் என்ற அமைப்பில் தலைமை பொறுப்பில் உள்ள திருநங்கைகள், மாமூல் கேட்டு மிரட்டுவதாக சக திருநங்கைகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னையில் ஜமாத் அமைப்பில் 21 திருநங்கைகள் தலைவிகளாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் சுய தொழில் செய்து பிழைக்கும் திருநங்கைகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மந்த்ரா என்பவர் தலைமையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.