இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் போர் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் டெல் அவிவ் நகரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது அமைதியில்லாத சூழலை உருவாக்கும் இஸ்ரேல் அரசை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். மேலும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என பதாகைகளை ஏந்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.