ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி மற்றும் 4 தோல்விகளைக் கண்டுள்ளது.
முன்னதாக சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியில், சென்னை அணி லக்னோ அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ளும் சென்னை அணி, உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பிற்பகல் 3.30 மணிக்குஅகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.