கரூரில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
காந்திகிராமம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.நகரில் வசித்து வரும் மனோகரன் என்பவருக்கும், நிதி நிறுவன அதிபர் ரகுநாதன் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ரகுநாதன் வீட்டிற்கு சென்ற 10 பேர் கொண்ட கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது