குற்றால அருவிகள் நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தென்காசியில் உள்ள குற்றாலத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதுமான மழை இல்லாததால், குற்றால மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகள் நீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.