மயிலாடுதுறை மாவட்டத்தில், தரங்கம்பாடி மற்றும் பூம்புகார் மீனவர்களுக்கிடையே கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தரங்கம்பாடியை சேர்ந்த 9 மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பின்னர் புதுப்பேட்டை மீனவ கிராமத்திற்கு கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க வலை வீசியுள்ளனர்.
அப்போது அங்கு 3 பைபர் படகுகளில் வந்த பூம்புகாரைச் சேர்ந்த மீனவர்கள்,
படகு மற்று வலைகளை சேதப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் தரங்கம்பாடியைச் சேர்ந்த சதீஷ்குமார், நித்திஷ் ஆகிய இரு மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து அவர்களை மீட்ட சக மீனவர்கள், சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தரங்கம்பாடி மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.