சென்னையில் வரத்துக் குறைவின் காரணமாக இளநீரின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு வழக்கத்தைவிட வெப்பத்தின் அளவு அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பலரும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, இளநீர் வாங்கி பருகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் வரத்துக் குறைவின் காரணமாக இளநீரின் விலை கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு 40 ரூபாய்க்கு விற்பனையான இளநீர், தற்போது 90 ரூபாய் வரை விற்பனையாகிறது.
வரத்து குறைவின் காரணமாகவே விலை அதிகரித்திருப்பதால், குறைந்த லாபமே கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.