சென்னை ஆவடி அடுத்த திருமுல்லை வாயிலில், அந்தரத்தில் தொங்கிய குழந்தையை அக்கம் பக்கத்தினர் லாவகமா மீட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
திருமுல்லைவாயில் பூம்பொழி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, குழந்தை தவறி கீழே விழுந்தது. இதனால், குழந்தையின் தாய் அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டி, கதறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கூரையிலிருந்து வழுக்கிக் கொண்டு சென்ற குழந்தையை போட்டிபோட்டு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தையை பத்திரமாக மீட்கும் வகையில், மாடியின் கீழே பலரும் பெட் சீட்டுடன் காத்திருந்தனர்.
இதனையடுத்து அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அழகாக சுவற்றில் ஏறிய ஆண் ஒருவர் குழந்தையின் காலை பிடித்து லாவகமாக மீட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே குழந்தையை பத்திரமாக மீட்ட பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.