கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கிற்கு பணம் வாங்காததால் குடிநீர் வழங்கவில்லை என கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு நரிக்குறவர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில் இப்பகுதி மக்கள் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கிற்கு பணம் வாங்காமல் வாக்களித்துள்ளனர்.
இதனால் ஊராட்சி நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு ஒரு வார காலமாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.