ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, பவானிசாகர் அணையின் நீர்த் தேக்கப் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சுமார் 45 அடியாக சரிந்தது. இந்நிலையில், கரையோரத்தில் உள்ள சித்தன்குட்டை, ஒத்தை பனை ஆகிய பகுதிகளில், ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
கடுமையான வெயில் நிலவுவதால் வெப்பம் தாங்காமல் மீன்கள் இறந்து விடுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.