புதுச்சேரி டிஜிபி ஸ்ரீநிவாஸ் உத்தரவின் பேரில், குற்ற செயல்களில் ஈடுபட்ட 31 ரவுடிகள் மீது அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த செவ்வாய்கிழமை அன்று மதுபான விடுதி மற்றும் கோயில் திருவிழாவில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள குற்றப்பதிவேடு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் சுற்றிதிரியும் இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
அதேபோன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டம் உள்ளதாக சந்தேகப்படும் இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், 39 ரவுடிகளைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், 31 ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.