வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் கடற்கரை சாலையில், தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது பேசிய அவர்,
கோடை வெயிலில் தாகத்தை தணிக்க சென்னையில் 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
வெயில் காரணமாக 188 இடங்களில் மாநகராட்சி சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 12 மணி முதல் 3 மணி வரை பொது மக்கள் வெளியே வர வேண்டாம் அறிவுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.