மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் கன்டி பாஜகவில் இணைந்தார்.
அவர் ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் போட்டியிட தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
இதனிடையே அவர் அமைச்சர் விஜய்வாக்ரியாவுடன் காரில் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் பாஜகவில் இணைந்துள்ளதை விஜய்வாக்ரியா தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.