காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் திரளான பக்தர் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசம் செய்தனர்.