ஈரோட்டில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி பழுதான பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.
ஈரோடு தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் அதற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு அருகே உள்ள அரசுப் போக்குவரத்துக் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயந்திரங்களை கன்காணிக்க வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஒரு கேமரா, திடீரென பழுதாகி பின்னர் மாற்றம் செய்யப்பட்டது.
இதனையடுத்து கேமரா பழுது ஏற்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சன்காரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் பார்வையிட்டனர்.