நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் 200 ரன்களுக்கும் மேல் பேட்ஸ்மென்கள் குவித்து வரும் நிலையில் பந்துவீச்சாளர்கள் நீதி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்களுக்கு என்னதான் ஆனது என்று பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்….
சமூக வலைதளங்கள்ல கடந்த சில நாட்களாவே நடந்துட்டு இருக்கிற மௌன போர் என்னனா, பவுலர்களுக்கான நீதிய பத்திதான்…
ஐபிஎல் தொடரில் இப்போ, கிட்டத்தட்ட ஒவ்வொரு இன்னிங்ஸ்கள்லயும் பவுலர்கள் அடி மேல அடி வாங்கிட்டு இருக்கிறாங்க… இந்த ஐபிஎல் சீசனில் 10 இன்னிங்ஸ்கு மேல, 1st இன்னிங்ஸ் ஸ்கோர், 200 ரன்கள் மேல இருக்கிறதும்…
குறிப்பா கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதின போட்டியில 261 ரன்கள் சேஸ் பண்ணின பஞ்சாப், டி20 கிரிக்கெட் வரலாற்றில இதுவரை யாரும் சேஸ் செய்யாத ஒரு ஸ்கோரை இலக்க எட்டின அணி அப்படிங்கிற சாதனைய படைச்சிருக்காங்க…
அதிக ஸ்கோர் அடிச்சதுல டாப் ஆப் தி டேபிள்ல இருக்கிறது, சன் ரைசர்ஸ் அணி தான்…. பேர் தான் சன் ரைசர்ஸ்ன்னு பாத்தா, அக்னி நட்சத்திரம் வரர்துக்கு முன்னாடியே கொளுத்தி வீசிட்டு இருக்காங்க…
2013 ஆவது வருஷம் ஐபிஎல் தொடர்லயே ஒரு இன்னிங்ஸ் அதிக ஸ்கோர் அடிச்ச ரெக்கார்டு வச்சிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியோட 263 ரன்கள் ரெக்கார்ட, யாருமே தொட முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்த சமயம், சன் ரைசர்ஸ் அணி அந்த ரெக்கார்டுக்கு சொந்தமான ஆர் சி பி அணிக்கு எதிராவே 287 ரன்கள் அடிச்சு, புதிய சாதனையை பதிவு செஞ்சாங்க…
அந்த போட்டிக்கு பிறகா, மும்பை இந்தியன்ஸ் அணிய முடிச்சுக் கட்ட முடிவு பண்ணின சன் ரைசர்ஸ், இரண்டாவது highest ஸ்கோரா, 277 ரன்கள விளாசி, மும்பை அணிய கிள்ளி வீசிட்டாங்க…
3 ஆவதா இருக்கிறது யாருன்னு பாத்த, அது நடிகர் ஷாருக்கானோட கொல்கத்தா அணிதான்… டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில 272 ரன்கள் அடிச்சு ஆச்சரியத்தில ஆழ்த்தினாங்க கே கே ஆர்… 4 வதா சூரியன் உக்கிரமா இருக்கிற சன் ரைசர்ஸ் அணி டெல்லிக்கு எதிரான போட்டியில 266 ரன்கள் விளாசி தள்ளினாங்க…
5 ஆவது இடத்தில 262 ரன்களோட பஞ்சாப் அணி, 6 வது இடத்தில அதே 262 ரன்களோட பெங்களூர் அணி, 7 வது இடத்தில 261 ரன்களோட கொல்கத்தா அணி, 8 வது இடத்தில 257 ரன்களோட டெல்லி அணி, 9 வது இடத்தில 246 ரன்களோட மும்பை அணி, 10 வது இடத்தில 234 ரன்களோட அதே மும்பை அணின்னு அடுத்தடுத்து 200 ரன்களுக்கும் மேலான முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள் அடிசிருக்காங்க ஐபிஎல் அணிகள்…
குறிப்பா இந்த தொடர்லயே ஒரு இன்னிங்ஸ்ல அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து இருக்கிற பந்துவீச்சாளர்கள் பட்டியல்ல முதல் 5 இடங்கள்ல இருக்கிறவங்கள பாத்தா, அங்க முதல்ல இருக்கிறது, போன வருஷம் குஜராத் அணியோட ஸ்டாரா இருக்கிற மோகித் சர்மா தான்…
டெல்லி அணிக்கு எதிரா, அவர் பந்து வீசின கடைசி ஓவர்ல ஃப்ரீ ஸ்டைல் டான்ஸ் ஆடின ரிஷப் பந்த், மோஹித் சர்மா ஓவர தொவச்சு எடுத்திட்டாரு…
அதனால அந்த போட்டியில 4 ஓவர்கள்ல 73 ரன்கள் கொடுத்து, ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு போட்டியில அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் அப்படிங்கிற மோசமான சாதனையை பதிவு பண்ணியிருக்கார்.
அதே போல பெங்களூர் அணியை சேர்ந்த டாப்லே, சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில 4 ஓவர்கள் வீசி 68 ரன்களும், மும்பை அணிய சேர்ந்த லூக் வுட் 4 ஓவர்கள் வீசி 68 ரன்களும், அதே மும்பை அணிய சேர்ந்த கே டி மபாகா சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 66 ரன்களும் விட்டுக் கொடுத்துருக்காங்க…
ஒரு கட்டத்தில சென்னை 6 லட்சத்து இருபத்தி எட்டு படத்தில வர மாதிரி, மச்சான், அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான் டா, அப்படிக்கிற moment தான் மிச்சம்…
இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டோட தரம் பேட்டர்களுக்கு சாதகமாகவே அமஞ்சு ரன் மழைய பொழியுற பேட்டர்களுக்கு பாராட்டுகள ஒருபக்கம் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் “பரிதாபகரமான நிலையில இருக்கிற பந்துவீச்சாளர்களுக்கான நீதி எங்க போச்சு” அப்படின்னு இப்போ நிறைய பேர் கொடி தூக்க ஆரமிச்சுருக்காங்க…
இந்திய வீரர் அஸ்வின் தன்னுடைய x தளத்தில, பந்துவீச்சாளர்கள யாராச்சும் காப்பாத்துங்க அப்படின்னு பதிவு பண்ணியிருக்காரு… சரி இந்த சம்பவம் இப்படி தரமா நடக்கிறதுக்கான இன்னொரு காரணம் என்னன்னு கேட்டா, அதுக்கு இம்பாக்ட் பிளேயர் விதிதான் காரணம் அப்படின்னு ஒரு தரப்பும், மைதானத்தோட தரத்த பிசிசிஐ பரிசோதிக்கனும் அப்படின்னு இன்னொரு தரப்பும் தங்கள் கருத்துகளை சொல்லுறாங்க…
அப்படி பாக்க போனா டெல்லி, குஜராத் அணிகள் மோதின ஒரு போட்டி லோ ஸ்கோரிங் போட்டியாவும், இம்பாக்ட் பிளேயர் விதிய பயன்படுத்தி பேட்டர்களுக்கு சாதகமா பேட்டிங் டீம் இறங்கினாலும், பந்துவீச்சு செய்யக்கூடிய அணி ஒரு கூடுதல் பந்துவீச்சாளர களமிறக்கவும் விதி இருக்கிறது சமமான ஒண்ணா பாக்கப்படுது…
ஆனா எது எப்படியோ, நாட்கள் போக போக பிளாக் பாஸ்டர் போட்டிகள் தொடர்ந்துட்டு வரர்து, இந்த ஐபிஎல் தொடர்ல கூடுதலா விறுவிறுப்பு உண்டு பண்ணியிருக்குன்னு தான் சொல்லணும்…