கடலுக்குள் கார்பன் டை ஆக்சைடை திடப்பொருள் வடிவில் சேமிக்கலாம் என ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது.
தொழில்துறை வளர்ச்சியால் கார்பன் டை ஆக்ஸைடு அதிகமாக பூமியில் பரவி வருகிறது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் பூமிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக ஐஐடி ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொழில்துறை வளர்ச்சியால் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஜிகா டன் எடையிருந்த கார்பன் டை ஆக்ஸைடு தற்போது 9 ஜிகா டன் அளவு வரை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், நகரமயமாக்கல், இயற்கை அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் டை ஆக்சைடு, ஆயிரத்து 100 ஜிகா டன் அளவு வரை உயரும் அபாயம் உள்ளதாக ஐஐடி கூறப்பட்டுள்ளது.
எனவே ஆழ் கடலுக்குள் கார்பன் டை ஆக்சைடை, திட ஹைட்ரேட்டாக மாற்றி கடலின் மேற்பரப்பிலிருந்து 2 ஆயிரத்து 800 மீட்டர் ஆழத்தில் சேமித்து வைக்க முடியும் எனவும் இதனால் கடல் வாழ் உயிரிங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் ஐஐடி தெரிவித்துள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் பூமிக்கு பாதிப்பு இருக்காது எனவும், கடலுக்கு அடியில் களிமண் படிவங்களை அதிகரித்து, வாயு ஹைட்ரேட்டின் வெப்பநிலைத் தன்மையை மேம்படுத்தும் எனவும் சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.