வெளிநாட்டு முகமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்ஜியாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து இருபது சதவீத நிதியைப் பெறும் அரசு சாரா நிறுவனங்கள் தங்களை வெளிநாட்டு நிறுவனங்களாக பதிவு செய்ய வகை செய்யும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.
அதன்படி தலைநகர் பிலிசியில் மெகா பேரணி நடத்திய போராட்டக்காரர்கள் ரஷ்யாவின் தாக்கத்தால் இத்தகையை சட்டமியற்றப்படுவதாக குற்றம் சாட்டினர்.