இந்தியா “வல்லரசு” ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தானில் திவால்நிலையை தவிர்க்க “பிச்சை” கேட்கிறோம் என பாகிஸ்தானின jui -f கட்சி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நிலை குறித்து அதிருப்தி தெரிவித்த மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான், ஒவ்வொரு பாகிஸ்தானியர் மீதும் தேசிய கடனின் சுமை அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாக நாட்டை திவால் நிலைக்கு தள்ளிவிட்டோம் எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை ஆதரித்து பேசிய அவர், நாட்டின் கொள்கைகளை சிதைத்து ஜனநாயகத்தை விற்கப்பார்க்கும் அதிகாரிகள், கடும் விளைவுகளை சந்திப்பார்கள் என எச்சரித்துள்ளார்.