திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காட்டுத் தீ ஏற்பட்ட வனப்பகுதி சாம்பல் மேடுகளாக காட்சியளிக்கிறது.
கோடை வெயிலின் தாக்கத்தால் கொடைக்கானல் மேல்மலை, பூம்பாறை, மன்னவனூர் கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த நான்கு நாட்களாக காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரின் தீவிர முயற்சியால் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதி சாம்பல் மேடுகளாக காட்சியளிப்பதால், அதிகளவு வன விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.