விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பூ மாரியம்மன் கோயில் சித்திரை மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சங்கரபாண்டியபுரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பூ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதலில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.