தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட நபர்களை காப்பாற்றிய சிறுவனை, அம்மாநில முதல்வர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
ஹைதராபாத்தில் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தின்போது மூன்றாவது தளத்தில் ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதனை கவனித்த சிறுவன் சாய்சரண், மேலிருந்து கீழே இறங்க கயிறை கட்டி வழிவகை செய்ததால், 50-க்கும் மேற்பட்டோர் உயிர்தப்பினர்.
இந்நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனை அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.