வேலூரில் கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பந்ததாரரிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், அப்போதைய மாநகராட்சி ஆணையருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2017-ம் ஆண்டு வேலூர் மாநகராட்சி ஆணையராக குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக ஒப்பந்தம் எடுத்திருந்த பாலாஜி என்பவரிடத்தில், சுமார் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்க, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார்.
அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.