டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை, மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி தேர்வு குறித்து அஜித் அகார்க்கர் தலைமையில் இந்திய அணி தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அதன்படி, தற்போது டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அணியில் விராட் கோலி, யஜஸ்வி ஜெய்ஸ்வால், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த், சுஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்த்ரா சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட போதும், தமிழக வீரர்கள் நடராஜன், அஸ்வின், ஷாருக்கான், சாய் கிஷோர், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட ஒருவர் கூட இடம் பெறவில்லை.