இந்தியக் கடலோரக் காவல்படை, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியில், அரபிக் கடலில் 173 கிலோ போதைப்பொருட்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை வழங்கிய குறிப்பிட்ட மற்றும் நம்பகமான உளவுத் தகவல்களின் அடிப்படையில், இந்தியக் கடலோரக் காவல்படை சந்தேகத்திற்கிடமான படகை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை மேற்கொண்டு, மீன்பிடி படகும் அதிலிருந்த இரண்டு பேரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டது.
சமீபத்தில் ஒரு பாகிஸ்தான் மீன்பிடி படகு கணிசமான அளவு போதைப்பொருளுடன் தடுத்து வைக்கப்பட்டது உட்பட, கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியக் கடலோரக் காவல்படை மேற்கொண்ட பன்னிரண்டாவது நடவடிக்கையாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.