திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை! சமூக நீதியும் இல்லை! - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
May 4, 2026, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை! சமூக நீதியும் இல்லை! – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Apr 30, 2024, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிரணி தலைவரும், பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2023 நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டம், சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து முழுமையாக ஆய்வு நடத்துவதற்குள், அவசர அவசரமாக ஜேசிபி இயந்திரம் மூலம் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்படவில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

கடந்த மார்ச் மாதம், மகளிர் நலத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதக்கமும் சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான் தெருவில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்து பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. ஆனால், இப்போது மாட்டுச் சாணம் கலக்கப்படவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் பதக்கமும், பாராட்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேன்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட, மனித இனமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவம் நடந்து 15 மாதங்களுக்கு மேலாகிறது.

ஆனாலும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியாத திமுக அரசு, அதுபோல நடக்கும் சம்பவங்களை மூடி மறைத்து வருகிறது.

எதற்கெடுத்தாலும் சமத்துவம், சமூக நீதி என்று தான் திமுக அரசு பேசுகிறது. ஆனால், உண்மையிலேயே திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை. சமூக நீதியும் இல்லை. குடும்ப ஆட்சியும், ஊழலும் இருக்கும் இடத்தில் சமத்துவமும் இருக்காது. சமூக நீதியும் இருக்க முடியாது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை விமர்சிப்பவர்களை கைது செய்வதற்கும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும் மட்டுமே தமிழக காவல்துறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வேங்கைவயல் சம்பவத்தில் திமுக அரசின் செயலற்றத்தன்மை வெளிப்பட்டுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Vanathi Srinivasan
ShareTweetSendShare
Previous Post

173 கிலோ போதைப்பொருள், மீன்பிடி படகு பறிமுதல்: இருவர் கைது!

Next Post

தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!

Related News

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த பெண் – திருச்சியில் உடல் அடக்கம்!

பழங்குடியினருக்கு சம வாய்ப்பும், வசதியும் வழங்க வேண்டும் – மோகன் பாகவத்

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு காங். முட்டுக்கட்டை போடுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

மாற்றத்திற்கான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு பதிவாகியுள்ளது – ராஜேந்திர பாலாஜி

கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் – ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை!

மேற்கு வங்க ஃபால்டா சட்டமன்ற தொகுதியில் மறுதேர்தல் : 21-ம் தேதி நடைபெறுகிறது!

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies