2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 151(2)ன்படி, இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி, தமிழக அரசின் கணக்குகள் மீதான தனது தணிக்கை அறிக்கைகளை மாநில சட்டமன்றத்தின் முன் வைக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதன்படி, 2022 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழக அரசின் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கையை மாநில சட்டப் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக 29.04.2024 அன்று மேதகு தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது என முதன்மை தலைமை கணக்காயர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.