கேரள மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலின் எதிரொலியாக, தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் இரவிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.
போடிமெட்டு மலைச்சாலை வழியாக கேரள மாநிலத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சலின் எதிரொலியாக, போடிமெட்டு மலைச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் இரவிலும் ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.