குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி கட்சி அலுவலகத்திற்கு சென்று தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,
பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தாவில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு பிறகு பாஜக அலுவலகத்திற்கு சென்று தொண்டர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
அவர்களின் ஆற்றலும் உற்சாகமும் அலாதியானது என்றும், மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைப்பதை உறுதிப்படுத்த அவர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.