தமிழ் திரையுலக பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானாா்.
1977-ஆம் ஆண்டு வெளியான ஶ்ரீ கிருஷ்ணா லீலா படத்தின் மூலம் இசை உலகில் உமா ரமணன் அறிமுகமானாா்.
அதனை தொடா்ந்து பன்னீர் புஷ்பங்கள், வைதேகி காத்திருந்தாள், கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, முதல் வசந்தம், உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார்.
69 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார்.
இதையடுத்து இன்று மாலை சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்று காலை 11 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
பாடகி உமாரமணனின் இறப்பு செய்தி கேட்டு திரைத்துறையினா் மற்றும் ரசிகா்கள் தங்கள் வருத்தத்தை தொிவித்து வருகின்றனா்.