சென்னையில் ஏப்ரல் மாதம் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில்களில் பயணித்திருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தகவலளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மக்களுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான பயண சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 80 லட்சத்து 87 ஆயிரத்து 712 பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்திருப்பதாகவும் அதிகபட்சமாக, ஏப்ரல் 8-ஆம் தேதி 3 லட்சத்து 24 ஆயிரத்து 55 பேர் பயணித்திருப்பதாகவும் தகவலளித்துள்ளது.