திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்துள்ளார்.
இண்டி கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்,திரிணாமுல் காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்து வரும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அத்தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என அவர் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் அக்கூட்டணியில் உள்ள கட்சியை விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.