தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா நடைபெற்றது.
மறவபட்டி கிராமத்திலுள்ள முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா, 3 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் கடைசி நாளை ஒட்டி, ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வினோத திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள்
திரண்டிருந்தனர்.