பாகிஸ்தான் – காங்கிரஸ் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,
காங்கிரஸ் கட்சி இறந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் இளவரசர் ராகுல்காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளதாகவும், அதற்காக அவர்கள் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான கூட்டு அம்பலமாகியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பட்டியிலிட்ட பிரதமர் மோடி, 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், கிராமப்புறங்களில் 60 சதவீதம் பேருக்கு கூட கழிப்பறை வசதி இல்லை என தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஆனந்து மற்றும் கெடா தொகுதி மக்கள் அனைத்து சாதனைகளையும் முறியடித்து மிகப்பெரிய வெற்றி அளிப்பார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.