தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்திலுள்ள தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள், தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்துள்ளன.
கடந்த வாரம் இந்த பகுதியில் உள்ள தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம், அங்கிருந்த நூற்றுக்கணக்கான மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
தொடர்ந்து அதே மலையடிவாரப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டுயானைகள், மல்லையசாமி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்துவிட்டு சென்றன.
ஒரே வாரத்தில் இரண்டு முறை காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.