ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தில், உள்ள இலவச கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி பேருந்து நிலையத்தில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.