சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து வயிற்றில் இருந்த குழந்தையை கொன்ற செவிலியரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இவரும் மதுரையை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்த நிலையில் இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார்.
7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தனக்குத் தானே கழிவறையில் பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்து பிறந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் செவிலியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.