நாகையில் நிவாரணத் தொகை வழங்காததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகூர் அருகே பனக்குடியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள பனங்குடி, கோபுராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கான நில உரிமையாளர்களுகு இழப்பீடு தொகை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.