நாமக்கல் அருகே கோயில் திருவிழாவை நடத்த அனுமதிக்காத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துகாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவவருக்கும், மகா மாரியம்மன் கோயில் நிர்வாகிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதனால் கோயில் திருவிழாவை நடத்த விடாமல் ஊராட்சி மன்ற தலைவர் அருள் ராஜேஷ் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.