தொலைத் தொடர்புத்துறை உரிமதாரர்களுக்கான தொடர்பு முகாம் 11.05.2024 அன்று குன்னூரில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமின் போது உரிமதாரர்கள் சரஸ் (SARAS) போர்ட்டல் மூலம் காலாண்டு மற்றும் வருடாந்தர ஆவணங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது, இந்தப் போர்ட்டல் மூலம் எவ்வாறு பணம் செலுத்துவது என்பது பற்றி விளக்கம் அளிக்கப்படும். இத்துடன் குறைதீர்ப்பு முகாமும் நடைபெறும்.
குன்னூர் பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ்ச் மாநாட்டு அரங்கம், முதல் மாடி, கிரேஸ் ஹில், குன்னூர், நீலகிரி – 643 101 என்ற முகவரியில் 11.05.2024 அன்று காலை 10 மணிக்கு இந்த முகாம் நடைபெறும்.
இது குறித்த அறிவிப்பு மற்றும் இதர விவரங்கள் www.cgca.gov.in/ccatn என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.