சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் தினமும் ரயில்கள் இயக்கப்படுவதால் திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் வேலூர் கண்டோன்மெண்ட் பாசஞ்சர் ரயில், பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12.05க்கு சென்றடையும்.
அதேபோல் மறுநாள் திருவண்ணாமலையிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு பாசஞ்சர் ரயில் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மணிநேரம் பயணத்திற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வேலூர் கண்டோன்மெண்ட் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்ய வந்த பயணிகளை அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பினர் உற்சாகமாக வரவேற்றனர்.