உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் குழுவில், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் ஓர் முன்னணி அமைப்பாக திகழ்வதாகவும், இதில் உறுப்பினருக்கான விதிகள், கட்டண முறைகளில் காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் வரும் 16ம் தேதி நடைபெற இருக்கும் சங்கத் தேர்தலில் பொருளாளர் பதவி மகளிருக்காக ஒதுக்க வேண்டும் எனவும், 6 முதுநிலை நிர்வாக உறுப்பினர் பதவியில் 2 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் எனறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அலுவலர் பொறுப்பில் 1 இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் சூர்யகாந்த மற்றும் கே.வி.விஸ்வநாதன் தீர்ப்பளித்தனர்.