கடந்த சில வாரங்களாக முக்கிய அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் , பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காரணம் என்ன? மாணவர்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது பற்றி பார்க்கலாம்.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தினர். பதிலடியாக இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இராணுவ நடவடிக்கை எடுத்தது. இதில் ஹமாஸ் தீவிரவாதிகள் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டவர்கள் பணயக்கைதிகளாகக் பிடிக்கப்பட்டனர்.
காசா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலில் 34,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த சம்பவங்கள் நடந்த காலத்திலேயே , அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் பதற்றம் உருவாக தொடங்கின.
அக்டோபர் மாதம் முதலே அமெரிக்கா முழுவதும் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் ‘யூத எதிர்ப்பு’ பற்றிய துண்டறிக்கைகள் மற்றும் செயல்கள் அதிகரித்தன. இப்போதைய போராட்டத்துக்கு அப்போதே விதை தூவப் பட்டன.
பல்கலைகழகங்களில் பேச்சு சுதந்திரம் எப்போது ஒரு எல்லையைத் தாண்டி அச்சுறுத்தலாக மாறுகிறது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் பல்கலைக்கழக தலைமைக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதமே அமெரிக்க மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் மற்றும் அமைதிக்கான யூத குரல் உட்பட 100 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கூட்டமைப்பு Columbia University Apartheid Divest (CUAD) என்ற பெயரில் கொலம்பியா பல்கலைகழக வளாகத்தில் போராட்டத்துக்கான தற்காலிக முகாம்கள் அமைத்தன.
மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எமர்சன் கல்லூரி, டெக்சாஸ் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி பல்கலைக்கழகம் உட்பட கிட்டதட்ட அமெரிக்காவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாலஸ்தீனிய சார்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்தனர் . தி நியூயார்க் டைம்ஸின் தகவல் படி, ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியே கொலம்பியாவில் மாணவர்கள், இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் என 1,000 க்கும் மேற்பட்டோரை காவலில் எடுத்துவிட்டனர்.
அமெரிக்க காவல்துறை , fbi என அனைத்து துறைகளும் முழு வீச்சில் போராட்டத் தடுப்பு நடவடிக்கைகளில் செய்யப்பட்ட போதிலும் கொலம்பியாவில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி இன்னமும் நீடிக்கிறது.
இஸ்ரேலுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு, பணம் எங்கிருந்து வருகிறது ? என்பது குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜார்ஜ் சொரோஸ்- இந்த பெயர் தான் அடிபடுகிறது. புகழ் பெற்ற அமெரிக்க செல்வந்தர். பலமுறை பல சர்ச்சைககளுக்கு காரணமான இவர் தான் அமெரிக்காவில் இப்போது நடக்கும் இந்த மாணவர் போராட்டங்களுக்கும் காரணம் என்று அமெரிக்க பத்திரிக்கைகள் எழுதி உள்ளன.
சமீபத்தில் இவருக்கும் – Columbia University Apartheid Divest (CUAD) அமைப்புக்கும் இடையே நிதி தொடர்புகளை ‘தி போஸ்ட் ‘ வெளிப்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கான போராட்டத் தேவைகள் உட்பட , உணவு தண்ணீர் என அனைத்துக்கும் ஜார்ஜ் சொரோஸ் தான் உதவி இருக்கிறார்.
இவை அனைத்தும் ஜார்ஜ் சொரோஸ் ஆதரவு பெற்ற Sikhs for Justice (SFJ) என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் மாணவர் கிளைகளால் sjp ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை ‘ஒரு வரலாற்று வெற்றி’ என்று நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு கூறியது குறிப்பிடத் தக்கது.
SJP அமைப்புக்கு நிதி பரிமாற்றம் எப்படி நடக்கிறது என்பது பற்றியும் தகவல் வந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனிய உரிமைகளுக்கான அமெரிக்க பிரச்சாரம் (USCPR) எனப்படும் சொரெஸ் நிதியளிக்கும் குழுவினால் நிதி பெறும் தீவிரவாதிகளால் போராட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
SJP ஆனது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சொரெஸின் open society foundation என்னும் அறக்கட்டளையிலிருந்து $300,000 அமெரிக்க டாலர் பெற்றதாகவும், ராக்ஃபெல்லிடமிருந்து $355,000 அமெரிக்க டாலர் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜார்ஜ் சொரோஸ் மற்றும் ராக்ஃபெல் ஆகிய இருவரும் தான் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தீவிரமாக போராட்டங்களில் ஈடுபட காரணம் என்று பெயர் குறிப்பிடாமல் கட்டுரை வெளியிட்டுள்ளது வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.
ஜார்ஜ் சொரஸின் இலக்காக இந்தியாவும் உள்ளது. பல சந்தர்ப்பங்களில், அவரும் அவரை சார்ந்த இந்தியாவுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்களும் இந்தியாவின் இறையாண்மையை சிதைக்கும் பல போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை இந்தியாவிலேயே நடத்த , ஜார்ஜ் சொரஸின் அமைப்புக்களுக்கு அமெரிக்க பக்க பலமாக இருந்தது.
இப்போது அவர்களாலேயே நடத்தப்படும் போராட்டங்களால் அமெரிக்கா சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சந்திக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் உண்மைதானே!