புதுச்சேரியில் பொதுமக்கள் காவலர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வசதியாக காவல் நிலைய என்கள் பதாகைகள் வைக்கப்பட்டது.
புதுச்சேரியில் சமீபகாலமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில் ஆப்ரேஷன் விடியல் என்கிற பெயரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் மது அருந்துவோர், போதைப்பொருட்கள் உபயோகிப்பது குறித்து தெரியவந்தால் காவலர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் அழைப்பு எண்களுடன் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.