மதிப்பிழப்பு செய்யப்பட்ட 98 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட போது, பொதுமக்களிடம் ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், அவற்றில் தற்போது வரை 97.76 சதவீத நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வரை 7,961 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடம் உள்ளதாகவும், அவற்றை ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தி செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.