புதிய படத்தில் நடித்து தருவது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
அதில் உத்தமவில்லன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக 30 கோடி ரூபாயில் மீண்டும் புதிய படத்தில் நடித்து தருவதாக நடிகர் கமல்ஹாசன் உத்தரவாதம் அளித்தார்.
மேலும் தயாரிப்பாளர் சங்கத்தினர் முன்னிலையில் தங்களுக்கு விருப்பமான கதையம்சத்தில் நடிப்பதாகவும் கடிதம் மூலம் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆனால் 9 வருடங்கள் கடந்தும் நடிகர் கமலஹாசன் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவரிடம் அதிகாரப்பூர்வ கால்சீட் பெற்று தருமாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.