கன்னியாகுமரியில், விவேகானந்தர் மண்பத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் மண்டபமும், அதன் அருகே 133 அடி உயருமுடைய திருவள்ளுவர் சிலை உள்ளது.
இப்பகுதிக்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வரும் நிலையில், விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே படகு மூலம் சுற்றுலாப்பயணிகள் செல்வது வழக்கம், இந்நிலையில் விவேகானந்தர் மண்டபத்தையும் வள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் வலியுருத்தி வந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் 37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் அதற்கான பணிகளை தொடங்கியும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 97மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் உடைய இந்த பாலம், உப்புக்காற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் அமைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.